தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தார தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.
பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார்.
தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார். சமீபத்தில் femi9 என்ற நேப்கின் கம்பெனி ஒன்றை சொந்தமாக துவங்கி நடத்தி வருகிறார். அந்த பிராண்டின் ப்ரோமோஷன் விழாவில் நயன்தாரா பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
முன்னதாக, ஜோதிடர் வேணு சாமி என்பவர் நயன்தாரா விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்து விடுவார்கள் என்றும், அது நடக்கவில்லை என்றால் ஜோதிடத்தை விட்டு விடுவேன் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவர் இப்படி பேசியது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இதற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா திருமணத்தின்போது இருவரும் பிரிந்து விடுவார்கள் என்று வேணுசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சோசியல் மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த நயன்தாரா, கடந்தாண்டு இன்ஸ்டாகிராமில் சேர்ந்த சில நாட்களில் 1 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்கள் அவரை பின் தொடர்ந்தனர். தற்போது, திடீரென தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் UnFollow செய்து நயன்தாரா அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், அவர் தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில், ஷேர் செய்துள்ள பதிவில், “எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்கிற கேப்ஷனும் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஸ்டோரியை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் எல்லாம் நல்லா தான போயிட்டு இருக்கு? இல்லை, ரெண்டு பேருக்கும் இடையில் ஏதாவது பிரச்சினையா? ஒருவேளை அந்த ஜோசியர் சொன்னது அதுக்குள்ள ஒர்க் அவுட் ஆயிடுச்சா.. என கேள்வி மேல் கேள்விகளை அடுக்கி வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.