‘கோமாளிகள்.. திருந்தவே மாட்டாங்க’.. நயன்-விக்கி விஷயத்தில் பிரபல நடிகையை மறைமுகமாக வெளுத்துவாங்கிய வனிதா..!

Author: Vignesh
11 October 2022, 3:45 pm

நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நயன்தாராவும் நானும் அம்மா , அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, எங்களுக்கு ஆசீர்வதிக்கப்ட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

nayanthara _updatenews360

உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நடிகை கஸ்தூரி வாழ்த்து ஏதும் தெரிவிக்காமல் மறைமுகமாக தாக்கியபடி போட்டுள்ள ட்வீட் சமூகவலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வனிதாவின் வாழ்த்து

இந்நிலையில், இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி நயன்தாரா தம்பதிக்கு வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். வனிதாவின் பதிவை பார்த்த ரசிகர்கள் கஸ்தூரியை மறைமுகமாக தாக்கியதாக கூறிவருகின்றனர்.

நடிகை வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, அன்பான பெற்றோருக்குப் பிறந்த 2 இன்னொசன்ட் குழந்தைகளின் பிறப்பை விட அழகானது என்ன, அவர்களுக்கு எல்லா குழந்தைகளும் பெறத் தகுதியான வாழ்க்கையை வழங்கவும் கொடுக்கவும் முடியும்.

vanitha_updatenews360

திருந்தவே மாட்டாங்க

ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை கெடுப்பவர்கள்தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் ட்வீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். முட்டாள்களாகிய நீங்கள் இதிலிருந்து தப்பிக்கலாம் என நினைக்கிறீர்களா? காத்திருந்து பாருங்கள்.

காதில் வாங்காதீர்கள்

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஒரு அழகான பெற்றோராக மிகவும் மகிழ்ச்சியான பயணத்தை தொடர நான் வாழ்த்துகிறேன். யார் என்ன சொன்னாலும் நீங்கள் காதில் வாங்காதீர்கள். குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் மிகச்சிறந்த விஷயத்தை நீங்கள் செய்துள்ளீர்கள். குழந்தைகளுடன் தகுதியான அன்புடனும் அக்கறையுடனும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார்… கடவுளின் ஆசிர்வாதம்.. என குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மோதல்

vanitha_updatenews360 1

வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வனிதா பேசியுள்ள ஒவ்வொரு விஷயமும் கஸ்தூரிக்கு கவுன்ட்டர் கொடுப்பது போன்றே உள்ளது என்றும் அவரைத்தான் சொல்கிறீர்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே வனிதாவுக்கும் கஸ்தூரிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அதனை தொடர்ந்து வனிதா பீட்டர் பாலை மூன்றாவது திருமணம் செய்த போது, பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக இருந்தார் கஸ்தூரி. அப்போது ஏற்பட்ட மோதலில் கஸ்தூரியை பிளாக் செய்தார் வனிதா என்பது குறிப்பிடத்தக்கது.

  • Idlikkadai vs Good Bad Ugly box office clash அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!