“உன்னை எல்லாம் ஏன்டா கொரோனா தூக்கல?” – கிறிஸ்துமஸை முன்னிட்டு விக்னேஷ் சிவன் நயன்தாரா நெருக்கம் !

25 December 2020, 10:57 pm
Quick Share

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே நடிகர்களை விட நடிகைகளாக நிலைப்பது தான் மிகவும் கடினமான விஷயம். நடிகைகள் ஒரு சில ஆண்டுகள் நிலைத்து நிற்பதே அரிதானதாக பார்க்கப்படுகிறது. அப்படியே அவர்கள் நிலைந்திருந்தாலும் திருமணத்துக்கு பிறகு அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால், கடவுளின் ஆசீர்வாதத்தாலும், தன்னுடைய கடின உழைப்பாலும், நேர்மையாலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக வெற்றி நடைபோட்டு வருகிறார் நடிகை நயன்தாரா.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் காதலர் ஆன இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது தயாரித்து உள்ள நெற்றிக்கண் படத்தின் போஸ்டர், Teaser ரிலீஸ் ஆகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இன்று கிறிஸ்துமஸ்-ஐ முன்னிட்டு நயன்தாராவோடு, ஜாலியாக கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படம் இப்போது வெளியாகி செம்ம வைரலாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது ரஜினிக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நடித்த நயன்தாரா, ரஜினி உடம்பு சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதை பற்றி கவலைப்படாமல் காதலர் விக்கியோடு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள் இதனை பார்த்த ரசிகர்கள், விக்னேஷ் சிவனை பார்த்து “உன்னை எல்லாம் ஏன்டா கொரோனா தூக்கல?” என்று வருத்தத்துடன் கமெண்ட் அடிக்கிறார்கள்

Views: - 53

0

0