விளம்பரத்தில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்கிய நயன்.. ஒரு நிமிட வீடியோவுக்கு பல கோடி ரூபாய் டிமாண்ட்..! (வீடியோ)

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.

அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தற்போது ஒரு படத்திற்கு சுமார் 5 முதல் 10 கோடி ரூபாய் வரைக்கும் சம்பளம் பெறுகிறார். அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

நயன்தாரா The lip balm company ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கென தனி ஜெட் விமானம் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் கணவருடன் அவ்வப்போது கொச்சி, ஹைதராபாத், மும்பை என ட்ரிப் அடிப்பார். அது தவிர அவரிடம் BMW 5s, Mercedes GLS 350 D, BMW 7 series, Toyota Innova Crysta என கார்களின் மதிப்பு மட்டும் ரூ. 5 கோடி. இது தவிர சென்னையில் பங்களா, தனி வீடு, கேரளா , ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் கார் பார்க்கிங் உடன் கூடிய வசதியான வீடுகள் உள்ளது. ஆக மொத்த சொத்து மதிப்பு ரூ.1000 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது. 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி என நடத்தி வந்த நயன்தாரா அண்மையில் Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட் தொழிலையும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கிளாமர் லுக்கில் சென்று கணவருடன் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். மேலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். மாசா குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அதன்படி, இந்த விளம்பரத்தில் நடிக்க மாசா நிறுவனத்தில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல, இனி தன்னை தேடும் விளம்பரங்களுக்கு அதிகமாக பேமெண்ட் கேட்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Poorni

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.