நயன்தாராவுக்கு தடபுடல் ரம்ஜான் விருந்து… பாய் வீட்டு பிரியாணியால் மணக்கும் வீடு!

Author: Shree
23 April 2023, 10:20 am
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற உச்ச அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து இருவரும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். நயன்தாரா அடுத்ததாக கமல்ஹாசன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ரம்ஜான் பண்டிகையின் ஸ்பெஷல் பிரியாணி விருந்துகள் அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்துள்ளனர். அதனை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ள விக்கி, “அன்பால் தானா சேர்ந்த பிரியாணி” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.

Views: - 1036

39

12