மாஸ்டர் திரைப்படத்தை ஓடிடியில் பார்த்தது இத்தனை மில்லியனா? – அடேங்கப்பா, இது வேற லெவல் எண்ணிக்கையா இருக்கே..!
3 February 2021, 3:54 pmலோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு முதல் நாளான 13ஆம் தேதி வெளியானது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படம் இரண்டு வாரங்களில் 200 கோடியை வசூல் செய்தது என்று கூறப்படுகிறது. படம் வெளியான 16 நாட்களிலேயே மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியானது. முதலில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யக்கூடாது என்று தயக்கம் காட்டினார்கள்.
ஆனால் படம் வெளியாகி அதை எத்தனை பேர் பார்த்து உள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அமேசான் பிரைமில் வெளியான முதல்நாளிலேயே உலகம் முழுவதும் 9.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அதேபோல் மொத்தம் 28 மில்லியன் பார்வையாளர்கள் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பார்த்துள்ளனர். திரையரங்குகள் மட்டுமல்லாது தற்போது ஓடிடி தளத்திலும் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
0
0