பீஸ்ட் படத்தில்  “காவி”வண்ணம் சர்ச்சை : படம் வெளியாகவுள்ள நிலையில் நெல்சன் பரபரப்பு பேட்டி..!

Author: Rajesh
12 April 2022, 7:34 pm
Quick Share

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார்.
இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ‘அரபிக்குத்து’இ ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ‘விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில், டிரெய்லரில் காவி வண்ணம் கொண்ட பேனர் ஒன்றை விஜய் கிழிப்பது போன் காட்சி இருக்கும் .அந்த காட்சி சர்ச்சையான நிலையில், அந்த படத்தின் இயக்குனர் நெல்சன் அது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், அய்யய்யோ.. காவிக் கலரையோ.. வேறு யாரையுமோ படத்தில் காயப்படுத்தவில்லை. அதில் எந்த குறியீடும் கிடையாது. அந்த காட்சி எடுக்கப்பட்ட போது , செட்டில் அடர்த்தியான ஆரஞ்ச் கலரில் பிளக்ஸ் பேனர் இருந்தது. காவி வண்ணம் இன்னும் மென் தன்மையுடன் இருக்கும் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Views: - 532

1

0