தியேட்டரில் விரைவில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை – செல்வா ரசிகர்கள் கொண்டாட்டம் !
8 February 2021, 10:58 am“வா அருணாச்சலம் நீ வருவன்னு எனக்கு தெரியும் Moment ” நெஞ்சம் மறப்பதில்லை எப்போ ரிலீஸ் பாஸ் ? என்பதுதான் வருட முடிவில் வரும் எல்லோருக்குமான கேள்வி. Cult இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் – நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. பாடல்கள் எல்லாம் செம ஹிட்டு.
” இந்த படம் ரிலீஸ் ஆனா என்ன ரிலீஸ் அகலனா என்ன ” என்று கிடப்பில் போட்டுவிட்டு தனுஷ் படத்தை எடுக்க சென்றுவிட்டார் செல்வராகவன். ஏற்கனவே சூர்யா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “என்.ஜி.கே”. இப்படத்திற்கு பலமே இயக்குனர் செல்வராகவன் தான், ஆனாலும்… முழு படத்தையும் போதையில் எடுத்தார் போல் இருந்ததால் ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய நெஞ்சம் மறப்பதில்லை படம் பல தடங்கல்களால் இன்று வரை வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று செல்வராகவன் ட்வீட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதுலாம் sure shot cult படம் வரட்டும் அப்பறம் தெரியும் செல்வா யார்னு ! என்று செல்வராகவனின் ரசிகர்கள் Tweet செய்கிறார்கள்.
0
0