கமல்ஹாசனுக்கு செக் வைத்த நெட்பிலிக்ஸ்? தக் லைஃப் தோல்வியால் வந்த வினை? அடக்கொடுமையே…

Author: Prasad
10 June 2025, 6:30 pm

சுமாரான வரவேற்பை பெற்ற தக் லைஃப்…

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. “மணிரத்னம் இயக்கிய மோசமான திரைப்படம்” என பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.  குறிப்பாக திரிஷாவின் கதாபாத்திரமும்  அவரின் மீது கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவருமே மோகம் கொள்வதும் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. 

netflix sent mail to kamal haasan to stream thug life movie in 28 days

கமலுக்கு வைத்த செக்

இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தால் கமல்ஹாசன் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது “தக் லைஃப்” திரைப்படத்தினை 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என நெட்பிலிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருந்தார் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன். 

ஆனால் தற்போது “தக் லைஃப்” திரைப்படத்திற்கு சரியான வரவேற்பு இல்லாத நிலையில் இத்திரைப்படத்தை 28 நாட்களில் ஓடிடியில் வெளியிட அனுமதி கொடுக்க வேண்டும் என நெட்பிலிக்ஸ் நிறுவனம் கமல்ஹாசனுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாம். ஒரு வேளை கமல்ஹாசன் அனுமதி கொடுக்காத பட்சத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகையில் 30 கோடியை குறைத்துவிடுவோம் எனவும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாம். 

netflix sent mail to kamal haasan to stream thug life movie in 28 days

ஏற்கனவே கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காத நிலையில் கர்நாடகாவில் இத்திரைப்படம் வெளியாகவில்லை. இதனால்  கமல்ஹாசனுக்கு ரூ.20 கோடி நஷ்டம் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் கமல்ஹாசன் அனுமதி கொடுக்காத பட்சத்தில் ரூ.30 கோடியை குறைத்துவிடுவோம் என கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்
  • Leave a Reply