லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான “கூலி” திரைப்படம் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இத்திரைப்படம் குறித்து ரசிகர்களின் மத்தியில் பல எதிர்பார்ப்புகள் இருந்தன. இத்திரைப்படத்தில் கைக்கடிகாரம் பிரதானமான ஒன்றாக காட்டப்பட்டது. அந்த வகையில் இத்திரைப்படம் டைம் டிராவல் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அது மட்டுமல்லாது லோகேஷ் கனகராஜ்ஜின் திரைப்படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அது மட்டுமல்லாது படம் வெளியாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டிகள் இணையத்தில் வைரலானது.
“நான் 1000 கோடிக்கு கியாரண்டி கொடுக்க முடியாது. ஆனால் ஒரு நபர் கொடுக்கும் 150 ரூபாய் டிக்கெட்டுக்கு கியாரண்டி கொடுக்க முடியும். மக்களை திருப்திபடுத்துவதுதான் முக்கியம்” என கூறினார். அதுமட்டுமல்லாது ஆமிர்கான் கதாபாத்திரம் படம் முழுவதும் வரும் என கூறியிருந்தார். உபேந்திராவின் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரம் எனவும் கூறியிருந்தார்.
ஆனால் “கூலி” படத்தில் ஆமிர்கான் கிளைமேக்ஸில் மட்டும் தோன்றினார். அதுமட்டுமல்லாது உபேந்திராவின் கதாபாத்திரம் மிக சிறிய கதாபாத்திரமே. இந்த நிலையில் படம் வெளியானதற்கு பின் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “கூலி படத்தில் டைம் டிராவல் இருக்கும் என்று நான் கூறவில்லை. LCU என்றும் கூறவில்லை. ஆனால் இதெல்லாம் அவர்களே அப்படி நினைத்துக்கொண்டார்கள். மக்களின் எதிர்பார்ப்பிற்கு என்னால் கதை எழுதமுடியாது. நான் எடுக்கும் படம் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நல்ல விஷயம்” என கூறினார்.
லோகேஷ் கனகராஜ்ஜின் இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆன நிலையில் லோகேஷ் கனகராஜ்ஜை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பு வேறு மாதிரி உருட்டினார், இப்போ வேற மாதிரி உருட்டுறார் என கேலி செய்து வருகின்றனர்.
“கைக்கடிகாரத்தை காட்டியதால் டைம் டிராவல் என்று நாங்கள் நினைத்தது தவறுதான். ஆனால் லோகேஷ் கனகராஜ் அந்த கைக்கடிகாரத்தை மையமாக வைத்தே டிரெயிலரை வடிவமைத்திருந்தார்” எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.