அஜித் வந்தா மட்டும் போதும்.. வாயால் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட விக்னேஷ் சிவன்!!!

Author: Vignesh
29 December 2022, 6:30 pm
ajith - updatenews360-2
Quick Share

சமீபத்தில் நடந்த சினிமா இயக்குநர்களின் ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம் உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது ஏகே 62 படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவன் பேசிய காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கே ஒருத்தரை இரண்டு பெண்கள் எப்படி துரத்தி துரத்தி லவ் பண்ணுவது போல படம் எடுப்பீங்கன்னு பெரிய சர்ச்சையே கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

kaathu vaakula rendu kadhal - updatenews360

சுதந்திரம் கொடுத்துருக்காரு அந்த பேட்டியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன் அஜித் எனக்கு எந்தவொரு பிரஷரும் கொடுக்கவில்லை. ஆக்‌ஷன் படமாக எடுக்க வேண்டும் என எந்தவொரு நிர்பந்தமும் வைக்கவில்லை. உங்க இஷ்டத்துக்கு உங்க ஸ்டைல்ல படம் பண்ணுங்க என ஃபுல் ஃப்ரீடம் கொடுத்துருக்காரு என விக்னேஷ் சிவன் பேசியது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

ajith - updatenews360 3

அஜித் வந்தா போதும் அஜித் ஆக்‌ஷன் படத்தில் தான் நடிக்க வேண்டும், அதிரடி தான் காட்ட வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ். அவர் வந்தா மட்டும் போதும் என காத்திருக்கின்றனர் என இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் பேசிய வீடியோ க்ளிப்பை ஷேர் செய்து நெட்டிசன்கள் இயக்குநர் விக்னேஷ் சிவனை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

lokesh kanagaraj - updatenews360

லோகேஷ் தெளிவு அதே நேரம் அந்த பேட்டியில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் ரொம்பவே தெளிவா இருக்காங்க.. என்னதான் தங்கள் நடிகர் நடிச்சாலும், படத்தோட கன்டென்ட் முக்கியம். தங்களோட ஃபேவரைட் ஹீரோ திரையில் எந்தளவுக்கு இறங்கி நடிக்கின்றனர் என்பதை கவனிக்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள் என லோகேஷ் கனகராஜ் பேசியதையும் கம்பேர் செய்து வருகின்றனர்.

ajith - updatenews360

படமே ஓடாது வெறுமனே அஜித் மட்டும் திரையில் தோன்றினால் படங்கள் ஓடாது . அவரை இயக்கும் அளவுக்கு பிரில்லியன்ட்டான திரைக்கதை வேண்டும். ஆக்‌ஷன் படமாக இல்லை என்றாலும், திரைக்கதை வலுவாகவும் வித்தியாசமாகவும் இருந்தால் மட்டுமே படம் வெற்றி பெறும். இந்த ஆண்டு வெளியான வலிமை படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் குவிந்தன. அதையெல்லாம் விக்னேஷ் சிவன் மனதில் வைத்துக் கொண்டு தரமான படத்தை கொடுங்க என அஜித் ரசிகர்களே அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Ajith Vignesh - Updatenews360
Views: - 340

0

1