BSP மாநிலத் தலைவர் ஆனந்தன்; நடிகர் நடிகைகளின் வக்கீல்; இவங்களா? செம்ம அப்டேட்

Author: Sudha
23 ஜூலை 2024, 3:11 மணி
Quick Share

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து புதிய தலைவராக பொறுப்பேற்றார் வழக்கறிஞர் ஆனந்தன். இவர் சினிமா பிரபலங்கள் பலருக்கும் வழக்கறிஞராக இருந்துள்ளார் என்னும் செய்தி வெளியாகி இருக்கிறது.

ஹை கோர்ட் வளாகத்தில் இவரை ‘பிரசாந்த் வக்கீல்’ ஆனந்தனு சொல்வாங்க. அதாவது நடிகர் பிரசாந்துக்கும் அவருடைய முன்னாள்மனைவி கிரகலட்சுமிக்குமான விவாகரத்து வழக்கில் இவர்தான் நடிகர் பிரசாந்துக்காக ஆஜரானார். அந்த வழக்கில் பிரசாந்துக்கு நியாயம் கிடைத்தது என்றார் அவருடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவர்.

மேலும் மற்றுமொரு நட்சத்திரத் தம்பதிகளான பிரகாஷ் ராஜ் -லலிதா குமாரி விவாகரத்து வழக்கில் லலிதாகுமாரி தரப்பில் ஆஜராகி அவருக்கு நியாயம் வாங்கித் தந்தார் எனவும்

மேலும் நடிகர் பிரபுதேவாவுக்கும் அவர் மனைவி ரம்லத்துக்கும் இடையிலான விவாகரத்து வழக்கில் இவர் ரம்லத் தரப்பில் ஆஜராகி நியாயம் வாங்கித் தந்தார்.முக்கிய வழக்குகள் நடக்கும் சமயம் எல்லாம் இவர் வழக்கைக் வழி நடத்தும் விதம் பார்த்து எதிர் தரப்பு நடிகர்கள் தூக்கமில்லாமல் தவித்தார்கள்.

மேலும் நடிகை வடிவுக்கரசிக்காகவும் இவர் வாதாடியிருப்பதாகச் சொன்னார். மிகச் சமீபத்தில் நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் மோகன் சர்மா வீட்டை விற்ற விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர் சார்பாக இதே ஆனந்த் தான் வாதாடினார் எனவும் சொன்னார் BSP மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஆனந்தனுடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவர்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 118

    0

    0