ஃபர்ஸ்ட் டாக்டர்: இப்போ சூர்யா40: கோலிவுட்டின் புதிய வரவுக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு!

21 January 2021, 1:00 pm
Quick Share


டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா மோகனன், சூர்யா நடிக்கும் அவரது 40ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.


சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் சூரரைப் போற்று. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டரில் வெளியாகாமல் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. எனினும், விமர்சன ரீதியாக சூரரைப் போற்று நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நவரசா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், இது வெப் சீரிஸாக உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா தனது 40ஆவது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். இதற்கு முன்னதாக சூர்யா – பாண்டிராஜ் காம்பினேஷனில் பசங்க 2 படம் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா40 படத்தில் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சூர்யா40 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்த நடிகை பிரியங்கா அருள் மோகனுக்கு அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று பிரியங்கா அருள் மோகன் தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு அப்டேட்நியூஸ்360 சார்பாக நாங்கள் முதலில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இப்படியொரு தகவல் வெளியாகி வருவது அவருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 5

0

0