தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் முதல் அறிமுக நடிகைகள் வரை எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனை அட்ஜெஸ்ட்மென்ட் தான். அவர்கள் இயக்குனர்கள் , தயாரிப்பளர்கள் மற்றும் நடிகர்கள் சொல்படி நடந்தால் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்கமுடியும் என்றும் அதன் மூலம் தான் டாப் நடிகைகள் ஆகிறார்கள். அப்படி எல்லாவற்றிற்கும் வளைந்து செல்லும் நடிகைகள் தான் மார்க்கெட் பிடிக்க முடிகிறது.
இது வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையும் கூட தானாம். ஆம், ஜீ தமிழ் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக பிரபலமானவர் நடிகை சுவாதி சர்மா. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிறந்த இவர் மாடலிங் துறையில் இருந்து அதன் பின்னர் சினிமாவிற்கு வந்தார்.
கன்னடத் திரைப்படங்களான துரோணா, ஒண்டு கண்டேயா கதே மற்றும் ஃபார்ச்சூனர் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் 2021ல் ஜீ தமிழில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் என்ற தமிழ் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அட்ஜெஸ்ட்மென்ட் கொடுமை குறித்து பேசி பகீர் கிளப்பியுள்ளார்.
ஆம் நான் மாடலிங் துறையில் இருந்துக்கொண்டு சினிமா வாய்ப்புகள் தேடிய சமயம் அது. அப்போது என் அம்மாவுடன் செல்லும்போது வாய்ப்புகள் தேடிச்சென்றேன். அந்த நேரத்தில் என் அம்மா இருக்கிறார் என்பதை கூட யோசிக்காமல் என்னை அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைத்தார்கள். அதை கேட்டதும் என் அம்மா கோபப்பட்டு பயங்கரமா அந்த நபரை திட்டிவிட்டார்.
அப்போவே சினிமாவே வேண்டாம்…. நான் இருக்கும் போது இப்படி என்றால் நான் இல்லாத போது என்ன நடந்திருக்கும் என அம்மா கூறி வருத்தப்பட்டார். பின்னர் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் நடிக்க அம்மாவை சமாதானப்படுத்தி ஒப்புதல் வாங்கி பின்னர் தான் நடித்தேன். ஆனாலும் சென்னைக்கு வரவே எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு என சுவாதி சர்மா கூறினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.