ரீலா… ரியலா?.. நடு ரோட்டில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த நிவேதா பெத்துராஜ்.. வெளியான உண்மை..!

Author: Vignesh
1 ஜூன் 2024, 2:44 மணி
nivetha pethuraj
Quick Share

அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

nivetha pethuraj - updatenews360

மேலும் படிக்க: நயன்தாராவுக்கு கெட்டவுட்.. மூக்குத்தி அம்மன் 2-ம் பாகத்தில் அம்மனாக நடிக்கும் பிரபல நடிகை..!

முன்னதாக தமிழில், என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

nivetha pethuraj - updatenews360

மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!

இதனால், தெலுங்கு பக்கம் செல்ல அங்கு தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். ஆம், மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். தற்போது தஸ் கா தம்கி என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

nivetha pethuraj - updatenews360

மேலும் படிக்க: இத்துணூண்டு பாட்டில் இத்தனை லட்சமா..தங்க பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் நீடா அம்பானி..!

இதனிடையே, திடீரென நிவேதா பெத்துராஜின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. போலீஸ் இடம் சிக்கி வாக்குவாதம் நடந்து உள்ளது. இதற்கிடையில், கோபமடையும் நிவேதா பெத்துராஜ் கேமராவை மறைத்துவிடுகிறார். இது உண்மையாகவே நடந்த சம்பவமா இல்லை படத்தின் ப்ரோமோஷனா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால், இதுபோன்ற ப்ரோமோஷன் யுத்திகளை தற்போது பலரும் கையாண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கஸ்டடி படத்திற்காக கூட வெங்கட் பிரபு கைது என தெரிவித்து விஷயம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இறுதியில், அது அப்படத்திற்கான ப்ரோமோஷன் என தெரியவந்தது. அதே போல் இதுவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

அந்த வகையில், அந்த வீடியோவின் உண்மை குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பருவு என்ற வெப் சீரிஸ் சூட்டிங் ஸ்பாட் தானாம்? காரில் ஒரு பிணத்தை வைத்து சுற்றுவது போல் அந்த தொடரின் கதை இருக்குமாம். தற்போது, அதன் டிரைலர் வெளியாகி உள்ளது.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 134

    0

    0