5 வருடம் படமே இல்லை… கண் கலங்கிய கெத்து தினேஷ்..!

Author: Selvan
14 November 2024, 6:28 pm

கெத்து காட்டிய தினேஷ்

சமீபத்தில் தினேஷ் நடிப்பில் வெளியான லப்பர்பந்து திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் ஒரு கிராமத்து கிரிக்கெட் வீரராக கெத்து ரோலில் தினேஷ் எதார்த்தமாக நடித்திருப்பார்.

attakathi dinesh recent interview

இப்படத்தின் வெற்றிக்கு பிறகு புகழின் உச்சிக்கே சென்று விட்ட தினேஷ்,இந்த திரைப்படத்திலிருந்து அட்டகத்தி தினேஷ் என்கிற இவரின் பெயர் கெத்து தினேஷ் என்று மாறிவிட்டது என்றே கூறலாம்.

குக்கூவால் நடந்த சோகம்

தற்போது சமீபத்திய பேட்டியில் தினேஷ் தன்னுடைய சினிமா வாழ்வில் நடந்த சோகமான சம்பவத்தை பகிர்ந்திருப்பார்.அதில் குக்கூ திரைப்படத்தில் கண் தெரியாத நபராக நடித்திருப்பார் என்று சொல்லுவதை விட வாழ்ந்தார்னு சொல்லலாம்.

cuckoo movie affect my carrier

இவருடைய நடிப்பை பார்த்து பலர் இவருக்கு விருது கிடைக்கும் என்று எதிர் பார்த்தனர்.ஆனால் இவருக்கு எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.இப்படம் முழுவதும் கண் தெரியாமல் நடித்ததால் அடுத்த சில வருடம் இவரால் எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை.கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. இதன் தாக்கம் ஐந்து ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

இதையும் படியுங்க: ஒரு பாடலுக்கு இத்தனை கோடியா… உச்சத்தில் பிரபல பாடகர்..!

பறிபோன படவாய்ப்பு

இந்த படத்திற்கு பிறகு எங்கேயாவது ஷூட்டிங் சென்றால் கேமராவை சரியாக பார்க்க முடியாமல், லைட் வெளிச்சம் பட்டால் கண்களை மூடிக்கொள்வது உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வந்திருக்கிறார் . அதன் பிறகு மருத்துவரிடம் காட்டி இந்த பிரச்சனையை சரி செய்தேன் என்று அந்த பேட்டியில் பேசியிருப்பார்.

தற்போது இந்த பேட்டி வைரல் ஆனதையொட்டி இவ்ளோ கஷ்டப்பட்டு நடித்த மனிதருக்கு ஒரு விருது கூட வழங்கவில்லை என ரசிகர்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

  • Bigg Boss Tamil Season 8 updates பிக் பாஸ் வீட்டுக்கு படையெடுத்த பிரபல நடிகர்…உற்சாக வரவேற்பு கொடுத்து அசத்தல்..!
  • Views: - 236

    0

    0