ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்: மாநாடு டீசர் வெளியாகும்: சிம்பு அறிக்கை!

29 January 2021, 2:52 pm
Quick Share


தனது பிறந்தநாளன்று எனது குடும்பத்தினர் வந்து வீட்டிற்கு முன்பு காத்திருப்பதை நான் விரும்பவில்லை என்று நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. எப்போதும் ரசிகர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்பவர். அண்மையில், இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறார். வரும் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி சிம்பு தனது 38ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு….
வணக்கங்கள் எத்தனை தடைகளை தான் கடந்து வந்தாலும்…
என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு…
அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும், உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் முக்கிய காரணம்.


கொரோனா காலகட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பு கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள். உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.
உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
எனது பிறந்தநாளன்று நான் உங்களோடுதான் இருக்க வேண்டும்.
ஆனால், சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை.
வெளியூர் செல்கிறேன். என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை.

அதனால், நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம்.உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை ஒருங்கிணைப்பேன்.நாம் சந்திப்போம். ஒரு சிறு மகிழ்ச்சியாக என் பிறந்தநாளன்று “மாநாடு” டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும்… அனைவருக்கும் அன்பும்…நன்றியும்…
அன்பு செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0