நடிகைகள் என்றால் செல்வசெழிப்போடு வாழ்பவர்கள் என்ற எண்ணம் பொதுவாக பலரிடமும் உண்டு. ஆனால் அதெல்லாம் அவர்களின் மார்க்கெட் எகிறும்போதுதான். சில நடிகைகள் சினிமாற்குள் நுழைவதற்கு முன்பு வாழ்க்கையில் வறுமையால் அல்லாடப்பட்டிருப்பார்கள். அந்த வகையில் ஒரு பிரபல நடிகை சமீபத்தில் கொடுத்த பேட்டி ரசிகர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நுஷ்ரத் பருச்சா. இவர் 2002 ஆம் ஆண்டு “கிட்டி பார்ட்டி” என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு “ஜெய் சந்தோஷி மா” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின் பல பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கிய நுஷ்ரத், சந்தானம் நடித்த “வாலிப ராஜா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நுஷ்ரத், “கல்லூரி காலத்தில் நிதி பிரச்சனையால் அதிகளவு பாதிக்கப்பட்டேன். நான் ஒரு கல்லூரியில் 5 வருடங்கள் படித்தேன். தினமும் அந்த கல்லூரிக்குச் சென்று வர எட்டு ரூபாய் மட்டுமே செலவழிப்பேன். எனக்கு பசி ஏற்படும்போது கல்லூரியில் இலவசமாக இருந்த தண்ணீரை குடித்துதான் பசியை போக்கினேன். எனது அப்பா அவரது தொழிலில் ஏமாற்றப்பட்ட பிறகு நான் சம்பாதிக்கும் பணத்தை கவனமாக பார்த்துக்கொள்கிறேன்” என மிகவும் மனம் நொந்தபடி பேசியுள்ளார். இப்பேட்டி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.