காஜலுக்கு டும் டும் டும் ! அப்போ இந்தியன் 2 கமலோட வாழ்க்கை ?

Author: Babu
6 October 2020, 12:22 pm
32b9c6a9-411d-4168-b64a-1755b73149c9
Quick Share

இந்தியில் நடித்துக்கொண்டிருந்த காஜல் அகர்வாலை, பாரதிராஜா அவர்கள் இவரை தமிழில் பொம்மலாட்டம் என்கிற படத்தில் அறிமுகம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் காஜல் நடித்திருந்தார். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால் லாக் டவுன் முடிந்தவுடன் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் இவருக்கும் விரைவில் திருமணம் ஆகப்போகிறது இன்று நாங்கள் கூறியிருந்தோம். சொல்லி வைத்தார் போல் இன்று காஜல் அகர்வாலின் அதிகாரப்பூர்வமாக தனக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் ஆகப்போகிறது என்று அறிவித்துவிட்டார்.

ஏற்கனவே இருவரது நிச்சயதார்த்தம் குறித்து வதந்திகள் வந்தது. இதனால் இவரது ரசிகர்கள் ஏக மன வருத்தத்தில் இருக்கிறார்கள். அதைவிட இந்தியன் 2 படக்குழு இவர் மீது அப்செட் ஆக இருக்கிறார்கள் இருக்கிறது. இதை சில ரசிகர்கள் கிண்டலாக, “அப்போ இந்தியன் 2 கமலோட வாழ்க்கை!” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://twitter.com/MsKajalAggarwal/status/1313357505724997633/photo/1

Views: - 54

0

0