தியேட்டரில் 50% சீட்டுக்கு மட்டுமே அனுமதி: தமிழகத்தில் 4ஆவது இடம் பிடித்த மாஸ்டர்!

14 January 2021, 11:25 am
Master Collection - Updatenews360
Quick Share

மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தமிழகத்தில் 4ஆவது இடம் பிடித்துள்ளது.

விஜய் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வந்த மாஸ்டர் படம் பட்டி தொட்டியெங்கும் ரசிகர்களிடையே தாறுமாறாக வரவேற்பு பெற்று வருகிறது. மாஸ்டர் படத்தில் விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, சஞ்சீவ், ஸ்ரீமன், மகேந்திரன், சாய் தீனா, அர்ஜூன் தாஸ், தீனா, அருண் அலெக்சாண்டர், மகாநதி சங்கர், ரம்யா சுப்பிரமணியன், பிரிகிதா, கௌரி கிஷான், பிரேம் குமார், குறும்பட நடிகர்கள் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்குன்று கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தது.
கைதி படத்தில் ஹீரோயின் இல்லாமல், கார்த்தி, லாரி, போலிஸ் ஸ்டேஷன், போதைப் பொருள் இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு இரவு மட்டுமே படப்பிடிப்பை எடுத்து தான் ஒரு சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக் காட்டியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

ஆனால், விஜய்க்கு என்று முதல் பாதியையும், தனக்கென்று இரண்டாம் பாதியையும் எடுத்துள்ளார். 2ம் பாதியில், வழக்கம் போல் ஜெயில், லாரி, நைட்டு, ஹீரோ என்று பட்டை தீட்டிருக்கிறார். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், கைதி 2 என்று கூட கூறலாம்.

இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாஸ்டர் படம் நேற்று வெளியானது. அதோடு, உலகம் முழுவதும் மாஸ்டர் படம் திரைக்கு வந்தது. ஹிந்தியில் பொங்கல் தினமான இன்று 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சென்னையில் மட்டும் ரூ.1.21 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த படங்களில் சர்கார் முதலிடமும், பிகில் 2ஆவது இடமும், மெர்சல் 3ஆவது இடங்களும் பிடித்துள்ளன. இந்தப் படங்களைத் தொடர்ந்து மாஸ்டர் 4ஆவது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளுக்கு 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், மாஸ்டர் படம் 4ஆவது இடம் பிடித்திருக்கிறது. இதுவே 100 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்கா இருந்திருந்தாலும் மாஸ்டர் படம் தான் நம்பர் ஒன்னாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

ஆந்திரபிரதேசத்தில் மாஸ்டர் படம் ரூ.5.74 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது என்று சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா என்பவர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதிகப்படியான திரையரங்குகளில் வெளியான ஆஸ்திரேலியாவில் ரூ.1.4 கோடியும், நியூசிலாந்தில் ரூ.39 லட்சம் வரையிலும் வசூல் குவித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 9

0

0