“விவாகரத்துகள் தான் ஆடல் பாடல்களுடன் கொண்டாடப்பட வேண்டும்” – ராம் கோபால் வர்மா சர்ச்சை டுவிட்..!

Author: Mari
19 January 2022, 7:52 pm
Quick Share

கடின உழைப்பால் ஹாலிவுட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகார்களில் ஒருவராக இருக்கிறார் தனுஷ். தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்து வரும் தனுஷ் அவர்கள் தனது மனைவியை பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக சமூக வலைதளங்களில் கூறியுள்ளார்.
இதனால் பல்வேறு தரப்புகளிடமிருந்து பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், சமூகவலைதளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருபவர் தான் இயக்குனர் ராம் கோபால் வர்மா.


திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராம் கோபால் வர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

விவாகரத்துகள் தான் ஆடல் பாடல்களுடன் தான் கொண்டாடப்பட வேண்டும். காரணம் அதில் இருந்து கிடைக்கும் விடுதலை. திருமணங்கள் என்பது இருவருக்குள் குணாதிசயங்களைப் பரிசோதிப்பதற்காகவே, அதனால் அமைதியான முறையில் தான் திருமண நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

Views: - 210

0

0