பகலவன் கதை சர்ச்சையில் முந்திய லிங்குசாமி : சீமானை ஆஃப் செய்த பாக்கியராஜின் அதிரடி உத்தரவு..!!!

8 July 2021, 5:41 pm
lingusamy - seeman - updatenews360
Quick Share

கடந்த 2013ம் ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க இயக்குநர் லிங்குசாமி முடிவு செய்தார். ஆனால், அந்தக் கதை சீமானின் பகலவன் என்னும் பெயரிடப்பட்டுள்ள கதையை தழுவிய இருப்பதாகக் கூறப்பட்டது. அதுவும் பகலவன் படத்தில் விஜய், விக்ரம் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தன்னுடைய கதையை போலவே இயக்குநர் லிங்குசாமியின் கதையும் இருப்பதாகக் கூறி, இயக்குநர்கள் ஆர்கே செல்வமணி, விக்ரமன் ஆகியோர் தலைமையிலான இயக்குநர் சங்கத்தில் புகார் அளிக்க சீமான் முடிவு செய்தார். ஆனால், இந்த விவகாரத்தை அவர்கள் இருதரப்பினரையும் வைத்து பேசி தீர்க்கப்பட்டது. அதன்படி, சீமான் தமிழிலும், லிங்குசாமி மற்ற மொழிகளிலும் இந்தப் படத்தை எடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த சூழலில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு படத்தை இயக்க இயக்குநர் லிங்குசாமி ஒப்பந்தம் செய்தார். ஆனால், இந்தப் படத்தின் கதையும், தனது பகலவன் கதையும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறி சீமான் இயக்குநர் சங்கத்தில் மீண்டும் புகார் அளித்தார்.

சீமானின் புகாரை விசாரித்த இயக்குநர் சங்கத்தின் தலைவர் பாக்கியராஜ், சீமான் – லிங்குசாமி பிரச்சனை கடந்த 2013ம் ஆண்டே தீர்க்கப்பட்டு விட்டதாகவும், அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தை லிங்குசாமி மீறவில்லை எனக் கூறி, அவரது படத்திற்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.

இதனால் லிங்குசாமி திட்டமிட்டபடி தனது படத்தை இயக்கவுள்ளார். 8 ஆண்டுகளாக அந்தக் கதையை கிடப்பில் போட்டிருந்த சீமான், அதை அப்படியே மூடி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Views: - 335

2

0