பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அவருக்கு பதில் இவர்… ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்..!
Author: Vignesh19 July 2024, 5:39 pm
விஜய் டிவியின் சீரியல் என்றாலே அதுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதே போல தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பெரிய ஹிட் என்று சொல்லி தற்போது, இரண்டாம் பாகமும் ஆரம்பிக்கப்பட்டது. முதல் பாகத்தில் அண்ணன் தம்பி என்று கூட்டு குடும்பமாக கதை வைத்து பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது, பாண்டியன் ஸ்டோர் இரண்டாம் பாகத்தில் அப்பா, மகன் சென்டிமென்ட் கதை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் 2 வில் செந்தில் என்ற ரோலில் நடித்து வந்த வசந்த் வசி தற்போது, தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்கு பதிலாக நடிகர் வெங்கட் ரங்கநாதன். இனி அந்த ரோலில் நடிக்க இருக்கிறார் என தகவல்கள் வந்திருக்கிறது. இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் அவர் ஜீவா ரோலில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், மீண்டும் ஜீவா மீனா ஜோடி வருகிறது என ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்.
0
0