எஸ் ஏ சி இயக்கத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா: என்ன ஹீரோவா?

8 February 2021, 8:03 pm
Quick Share

எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவாவாக வரும் வெங்கட் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப கதையை மையப்படுத்திய இந்த தொடரில், ஸ்டாலின் முத்து, வெங்கட் ரங்கநாதன், குமரன் தங்கராஜன், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், காவ்யா அறிவுமணிம், சரவணா விக்ரம் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில், கதிர் மற்றும் முல்லை கெமிஸ்டரி ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த தொடரின் மூலம் பிரபலமான வி ஜே சித்ரா அண்மையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவரது கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மட்டுமல்லாமல், மிஸ்டர் அண்ட் மிசஸ் என்ற நிகழ்ச்சியிலும் குமரன் தனது மனைவி சுஹாசினியுடன் கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். குமரன் ஒரு டான்ஸரும் கூட. அவரது திறமைக்கு ஏற்ப பட வாய்ப்பும் வருகிறது. தற்போது பட வாய்ப்பு காரணமாக அவர் பெங்களுரு சென்றுள்ளதால், அவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பார்க்க முடியவில்லை.

கதிரைத் தொடர்ந்து ஜீவாவாக வரும் வெங்கட் ரங்கநாதனுக்கும் பட வாய்ப்பு குவிந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதனுக்கு தளபதி விஜய்யின் வீட்டிலிருந்து அழைப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி வந்துள்ளது. இதையடுத்து, எஸ் ஏ சி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார். இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க நடிக்க இருப்பதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். எஸ் ஏ சந்திரசேகருடன் இணைந்து வெங்கட் ரங்கநாதன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

விரைவில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் வெங்கட் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவர இருக்கிறது.

Views: - 0

0

0