பாரிஸ் ஜெயராஜ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

3 February 2021, 8:45 pm
Quick Share


சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், மொட்டை ராஜேந்திரன், சாண்டி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தானம் கானா பாடகராக நடித்துள்ளார/


ஏற்கனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்தை வரும் 12 ஆம் தேதி பாரிஸ் ஜெயராஜ் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக சந்தானம் – ஜான்சன் கே கூட்டணியில் ஏ 1 படம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் உருவான பிஸ்கோத் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 15

0

0