காட்டில் மாட்டிக்கொண்ட ஹீரோயின்; திக் திக் நிமிடங்கள்; வெளியான பேச்சி டிரெய்லர்,..
Author: Sudha13 July 2024, 11:57 am
பால சரவணன், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேச்சி. ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரைக்கு வருகிறது.
இயக்குனர் ராமச்சந்திரன் இயக்கும் ‘பேச்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்டார்.
இப்படத்தின் டிரைலரை தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். டிரைலரில், பால சரவணன் மற்றும் காயத்ரி சங்கர் தங்களது நண்பர்களுடன் ஒரு காட்டு பகுதிக்கு செல்கிறார்கள். மலைவாழ் மக்கள் வாழும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அவர்கள் நுழைந்து விட, பெரும் ஆபத்துக்கள் அவர்களை துரத்துகிறது. இந்த ஆபத்திலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை என்பது தெரிய வந்துள்ளது.
பேச்சி என்ற பட தலைப்பின் கீழே ‘பயம் என்பதன் புது பெயர் ’ போடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் சூனியம் வைக்கும் பொம்மை போன்ற உருவம் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த பேச்சி படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.
0
0