நெல் இருந்தால் தான் அரிசி: அரிசி தான் பொங்கல்: விவேக்கின் வித்தியாசனமான வாழ்த்து!

14 January 2021, 6:59 pm
Quick Share

நெல் இருந்தால் தான் அரிசி, அரிசி தான் பொங்கல் என்று நடிகர் விவேக் வித்தியாசமான முறையில் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத உச்சத்தில் இருப்பவர் நடிகர் விவேக். தன்னுடைய காமெடி கதாபாத்திரத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதோடு, தொடர்ந்து தனது படத்தின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அஜித் நடித்த விஸ்வாசம், வெள்ளைப் பூக்கள், விஜய்யின் பிகில், ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, விவேக்கிற்கு எந்தப் படமும் கைவசம் இல்லை. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டுவிட்டரில் அனைவருக்கும் வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். விவேக் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

மரம் இருந்தால் தான் மழை! மழை இருந்தால் தான் நீர்! நீர் இருந்தால் தான் நிலம்! நிலம் இருந்தால் தான் விவசாயம்! விவசாயம் இருந்தால் தான் நெல்! நெல் இருந்தால் தான் அரிசி! அரிசி தான் பொங்கல்!! அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!!
மேலும், பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் கழுத்தில் மாலை அணிந்து தலைப்பாகை கட்டியிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0