“பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை” நடிகர் சூர்யாவை பாராட்டிய வைரமுத்து..!
12 August 2020, 11:49 amரசிகர்களுக்கு வழங்கிய அறிவுறையை பார்த்து நடிகர் சூர்யாவை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் சூர்யா குறித்து மீரா மிதுன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் சர்சைக்குறிய கருத்தை பதிவிட்டிருந்தார். இதற்கு, விஜய், சூர்யா ரசிகர்கள் கடும் கண்டவம் தெரிவித்தனர். மேலும், ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளப்பக்கங்களில் மீரா மிதுனை திட்டி தீர்த்தனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், விஜய் மற்றும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தும், மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்தும் இயக்குனர் பாரதி ராஜா, மனோபாலா, சனம் செட்டி, நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் குரல் எழுப்பினர்.
இந்த சூழலில், நேற்று நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார், அதில் எனது தம்பி, தங்கைகள் நேரத்தை பயனுள்ளதாக செலவளிக்க வேண்டும் எனவும் தேவையற்ற விஷயங்கனை தவிற்குமாறும் கேட்டுக்கொண்டார். இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்:-
“சுமத்தப்பட்ட பழியின்மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை.
என குறிப்பிட்டுள்ளார். மீரா மிதுனின் செயலை நடிகர் சூர்யாவோ அல்லது நடிகர் விஜயோ கண்டுகொள்ளாமல் செல்வது அவர்களின் பக்குவத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.