ஆபாசத்தின் உச்சத்திற்க்காக கைதாகிறாரா இரண்டாம் குத்து பட இயக்குனரும் நடிகர்களும்? கமிஷனர் ஆபீஸில் புகார் !

Author: Udayaraman
9 October 2020, 9:22 pm
Quick Share

நேற்று முன்தினம் ரிலீசான இரண்டாம் குத்து படத்தின் டீஸரை பார்த்து எல்லோரும் முகள் சுழிக்க, சினிமாக்காரர்கள் மட்டும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தார்கள் .

இந்த படத்தின் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் தான் ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் டேனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் டீசரை பார்த்த எல்லோரும் என்ன தான் அடல்ட் படமாக இருந்தாலும் இவ்வளவு ஆபாசம் தேவையா ? என்று கேட்க்கிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா இப்படம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பனங்காட்டு படை தரப்பினர் இரண்டம் குத்து படத்தின் இயக்குனரும், படத்தில் நடித்த நடிகர்களையும் கைது செய்யக்கோரி புகார் அளித்துள்ளார்.

“இது இரட்டை அர்த்த சொற்கள் மற்றும் அதிகப்படியான மோசமான தன்மையைக் கொண்டிருப்பதால், இரண்டாம் குத்து திரைப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் மற்றும் நடிகைகள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும், மேலும் தமிழ்நாட்டின் இளைஞர்களையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் வகையில் கைது செய்யப்பட வேண்டும்.”

இப்படக்குழுவினரை முழுமையான விசாரணை நடத்தி இந்த ஆபாச திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்” என்றும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

Views: - 64

0

0