90ஸ் காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களின் வில்லன் நடிகராக பெரும் அளவில் பிரபலமானவர் நடிகர் “கபாலி” எனும் பொன்னம்பலம். இவர் மைக்கேல் மதன காமராஜன் என்ற படத்தில் நடிக்க துவங்கி செந்தூரப் பாண்டி, நாட்டாமை, கூலி, அருணாச்சலம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், சண்டை பயிற்சியாளாகவும் இருந்துள்ளார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அதிர்ச்சி பேட்டி கொடுத்துள்ளார்.
அதாவது, என் அப்பாவுக்கு மொத்தம் நான்கு மனைவிகள், அதில் மூன்றாவது மனைவியின் மகன் என் சொந்த அண்ணன் என்னுடைய மேனேஜராக பணிபுரிந்தார். அவரை அண்ணன் என்ற முறையில் நான் பெரிதாக நம்பினேன்.
ஆனால், அவர் எனக்கு வில்லனாக இருந்துள்ளார். ஆம், எனக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ள முயற்சித்துள்ளதாக, அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பொன்னம்பலம் இப்போதுதான் தேறி வருகிறார். இவருக்கு சிரஞ்சீவி, தனுஷ், சரத்குமார், கமலஹாசன் ஆகியோர் பொருளுதவி செய்து உதவினார்கள். இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்தும், திருமண வாழ்க்கை குறித்தும் ஒரு பேட்டியில், பொன்னம்பலம் ஓப்பனாக பேசியுள்ளார்.
பொன்னம்பலத்தை நேரில் பார்ப்பதை விட சினிமாவில் பார்க்கும் போது கொஞ்சம் பயங்கரமாகவே இருப்பாராம். அதனாலேயே அவருக்கு பெண் கொடுக்க பலர் தங்கியதாகவும், குறிப்பாக எந்த பெண்ணும் அவரை திருமணம் செய்ய முன்வரவில்லையாம். ஒரு சமயத்தில் பெண் பார்க்க பொன்னம்பலம் அவருடைய குடும்பத்தாருடன் பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால், அந்த பெண் இவர்தான் மாப்பிள்ளை என்று தெரிந்ததும் நேராக வீட்டிற்குள் சென்று தூக்கு மாட்டிக் கொள்ள சென்று விட்டாராம். இதைவிட காமெடி என்னவென்றால் பொன்னம்பலம் அந்த வீட்டிற்குள் போய் உட்கார்ந்து இருந்த நாற்காலி உடைந்து விட்டதாம். பார்ப்பதற்கு கொஞ்சம் கரடு முரடாக இருந்ததால் அந்த பெண்ணிற்கு பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம்.
மேலும், இவர் திருமணம் செய்திருக்கும் அவருடைய மனைவிக்கும் ஆரம்பத்தில் பொன்னம்பலத்தை பிடிக்கவில்லையாம். திருமணமாகி கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை அவருடைய மனைவி அவரிடம் பேசாமல் தான் இருந்து வந்தாராம். அதன் பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக பேசி பொன்னம்பலம் புரிய வைத்ததாக தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.