‘பாகுபலி 1’ வசூலை முறியடிக்குமா ‘பொன்னியின் செல்வன் 1’.. உலகளவில் நான்கு நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

Author: Vignesh
4 October 2022, 9:23 am
ps 1 updatenews360 2
Quick Share

1) ‘பாகுபலி 1’ வசூலை முறியடிக்குமா ‘பொன்னியின் செல்வன்’ .. உலகளவில் நான்கு நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகத்தில் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவின் கனவு படம் பொன்னியின் செல்வன் 1. பல ஆண்டுகள் பல தடைகளை மீறி இப்படத்தை மணி ரத்னம் இயக்கியுள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இப்படம் எதிர்பார்ப்பையும் மீறி மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விக்ரமில் தொடங்கி ஜெயராம் வரை அனைவரின் கதாபாத்திரமும் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் 3 நாள் முடிவில் ரூ.230 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது, வெளிநாட்டில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. அதோடு தமிழகத்தில் என்று பார்த்தால் 3 நாள் முடிவில் ரூ. 75 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் வெளிவந்து நான்கு நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது பொன்னியின் செல்வம். வேறு எந்த ஒரு திரைப்படத்திற்கும் கிடைக்காத மாஸ் ஓப்பனிங் இப்படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெறும் நான்கே நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன் விரைவில் பாகுபலி முதல் பாகத்தின் வசூல் முறியடிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 538

0

0