காதோடு சொல்… காதோடு சொல்… திரிஷாவின் வேறலெவல் டான்ஸ் உடன் இணையத்தை ஆக்கிரமித்த நீக்கப்பட்ட PS 1 பாடல் வீடியோ வெளியானது..!

Author: Vignesh
8 December 2022, 4:00 pm
ps 1 updatenews360.jpg 2
Quick Share

கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது பொன்னியின் செல்வன்.

லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் உலகமெங்கும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. அடுத்த ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது.

ps 1 updatenews360.jpg 2

பொன்னியின் செல்வன் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திலிருந்து நீக்கப்பட்ட சொல் என்கிற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ps 1 updatenews360.jpg 2

குந்தவை திரிஷாவும், வானதி ஷோபிதாவும் அழகு பதுமைகளுடன் நடனமாடும் காட்சிகளுடன் கூடிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு பாடலை தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.

Views: - 300

22

2