“கொஞ்ச நேரம் வேலை செய்ய விடும்மா”… பீஸ்ட் பட நடிகையின் அட்ராசிட்டி வீடியோ..!

Author: Mari
12 January 2022, 5:54 pm
Quick Share

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார்.

நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.


இந்நிலையில் பூஜா ஹெக்டே ஒரு குழந்தையுடன் கண்ணாடி முன் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 391

1

0