நின்று போன ஆர்யா – பூஜா திருமணம் – நடிகை பூஜா இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க !

26 February 2021, 7:03 pm
Quick Share

பூஜா இலங்கையை பிறப்பிடமாக கொண்டவர். பூஜா 2003 -ஆம் ஆண்டு வெளிவந்த ஜே ஜே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகே சிங்களம், மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்தார்.

இவர் தல அஜித்துடன் அட்டகாசம், ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நான் கடவுள் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

இவர் ஆர்யவோடு 4 படங்கள் நடித்துள்ளார், இருவரும் அந்த சமயத்தில் காதலித்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தார்கள். தற்போது Z தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக வருகிறார்.

இவருக்கும் அந்த நாட்டைச் சார்ந்த தொழிலதிபர் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் 2014-ம் நிச்சயம் நடந்தது. ஆனால், ஒரு ஆண்டிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணம் நடக்காமலேயே இருவரும் பிரிந்தனர்.​

அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் இலங்கை தமிழ் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் சிங்கள மொழியில் நடித்து வருகிறார் பூஜா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பரவி வருகிறது.

Views: - 12918

25

3