தன்னை விட 5 வயது குறைவான நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஓகே சொன்ன பூஜாகுமார் !

28 November 2020, 11:15 am
Quick Share

கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

தற்போது சத்யராஜின் மகன் சிபிராஜிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் சில நெருக்கமான காட்சிகளில் சிபிராஜுடன் நடிக்க இருக்கிறார். பூஜாகுமார் சிபிராஜை விட ஐந்து வயது மூத்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 45

0

0

1 thought on “தன்னை விட 5 வயது குறைவான நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க ஓகே சொன்ன பூஜாகுமார் !

Comments are closed.