சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.
அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.
ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.
மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் இன்று கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில், சாமி 2 படம் பிரமோஷனுக்காக விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரமின் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில், நடிகை கீர்த்தி சுரேஷிடம் நீங்கள் எந்த நாட்டிற்குச் செல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்டார் டிடி. அதற்கு நடிகை கீர்த்தி நார்த் இந்தியா என பதில் கூறினார். நார்த் இந்தியால எங்க என கேட்க அப்போது நடிகர் விக்ரம் ஏன்னா அது நம்ம இந்தியா நாட்டில் இல்லை என கீர்த்தி சுரேஷ்சை பங்கமாய் கலாய்த்த உடனே அங்கிருந்து அனைவரும் சிரிக்க தொடங்கிவிட்டனர். இது பழைய நிகழ்ச்சியாக இருந்தாலும், கீர்த்தி சுரேஷ் விக்ரம் கலாய்க்கும் இந்த வீடியோ மட்டும் தற்போதும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.