எந்த ஒரு சினிமா பின்பலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து முழுக்க முழுக்க தனது முயற்சியால், தனது திறமையால் மட்டுமே வளர்ந்து உச்ச நட்சத்திர நடிகராக இன்று வளர்ந்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன் .
இவர் திரைப்படங்களின் ஹீரோவாக வருவதற்கு முன்னர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கினார். அங்கிருந்து கொண்டே தனது திறமையை வெளிப்படுத்தி காட்டி ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் ஈர்த்து அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தவராக பார்க்கப்பட்டார்.
இதனால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. அதன்படி 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா திரைப்படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக தடம் பதித்தார். தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ , சீமா ராஜா , வேலைக்காரன் , நம்ம வீட்டுப் பிள்ளை , டாக்டர், மாவீரன் , அயலான் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகராக இடம்பிடித்தார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது. இதை அடுத்து எஸ் கே 23 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்த பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் . சிவகார்த்திகேயன் புது படத்தில் நடிக்க இருக்கிறார்.
டாக்டர் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் கைகோர்த்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இப்படத்தை குறித்து கூடுதலான சுவாரஸ்ய தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யா கமிட் ஆகியிருக்கிறார்.
மேலும், இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக பிரபல நடிகையான ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.