தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதில் விஜய் அப்பா, மகன் என இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என்பதை தெரியப்படுத்தினர். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார்.
இதில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கவுள்ளதாக முன்னர் வெளியான செய்திகள் கூறியது. இதில் லைலா இருப்பதால் ஒருவேளை அப்பா விஜய்க்கு ஜோடியாக லைலா நடிக்கிறாரோ? அப்போ சினேகா எந்த ரோலில் நடிக்கிறார் என குழப்பங்கள் ஏற்பட்டது.
இதனிடையே, படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடந்து வரும் நிலையில், தற்போது ஒரு ஸ்பெஷலான தகவல் ஒன்று லீக் ஆனது. இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இனிவரும் நாட்களுக்கு படம் குறித்த நிறைய அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு GOAT படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் பிளான் செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.
முன்பே கூறியிருந்தது போல், படப்பிடிப்பு வேலைகள் ஓரளவுக்கு முடிந்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் தயாரிப்பு நிறுவனம் வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். அதன் முதற்படியாக ஆடியோ ரைட்ஸ் வியாபாரம் நடந்துள்ளது. பிரபல டி சீரிஸ் நிறுவனம் விஜயின் 68வது படத்தின் ஆடியோவை 28 கோடி கொடுத்து வாங்கி உள்ளார்களாம். இவர்கள் இதற்கு முன்பு விஜயின் வாரிசு படத்தின் ஆடியோ ரைட்ஸ் 10 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்து, விஜய் அரசியலுக்கு செல்லும் காரணத்தினால் தளபதி 69 தான், தன்னுடைய கடைசி படம் என அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு, வந்த சமயத்தில் இருந்தே, யார் விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போகிறார் என பேச்சு இணையதளத்தில் எழுந்து வருகிறார்.
ஹெச்.வினோத், கார்த்திக் சுப்ராஜ், வெற்றிமாறன், ஆர்.ஜே. பாலாஜி, அட்லீ, தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் என பல இயக்குனர்களின் பெயர் இந்த லிஸ்டில் அடிப்பட்டது. ஆனால், தற்போது 99% சதவீதம் உறுதியாக இயக்குனர் ஹெச்.வினோத் கூறிய கதையை விஜய் ஓகே செய்துவிட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. சமூக அரசியல் சார்ந்த கதைக்களத்தை விஜய்யிடம் தெரிவித்து ஹெச்.வினோத் ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இதற்கான அறிவிப்பும் வெளியாகும் என பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.