பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப் பிறகுதான் அவர் இந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமானார். “பாகுபாலி” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து “சாஹோ”, “ராதே ஷ்யாம்” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இத்திரைப்படங்கள் சரியாக போகவில்லை.
அதனை தொடர்ந்து “ஆதிபுருஷ்” திரைப்படத்தில் பிரபாஸ் நடித்தார். இத்திரைப்படத்தை பலரும் ட்ரோல் செய்த நிலையில் படுதோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த “சாஹோ”, “கல்கி 2898AD” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது “கண்ணப்பா” திரைப்படத்தில் பிரபாஸ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபாஸ் நடித்த ஒரு ஹாரர் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. “ராஜாசாப்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் பிரபாஸுடன் சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மாருதி என்பவர் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும், “பிரபாஸுக்கு ஹிட் படம் கொடுக்கனும்னு ஆசையே இல்லை”, “படம் கண்டிப்பா ஃப்ளாப்தான்” என கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரபாஸ் நடித்துள்ள இத்திரைப்படத்தை இந்தியாவின் மிக பிரம்மாண்டமான ஹாரர் ஃபேன்டசி திரைப்படம் என அறிவித்துள்ளது படக்குழு. இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் இதோ…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.