இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.
இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யும் எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் பிக் பாஸ் 7 ல் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதில், யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.
இந்நிலையில், தினேஷ் மற்றும் பிரதீப், பூர்ணிமா இடையே கடும் வாக்குவாதங்கள் வந்தன. மேலும், அர்ச்சனா, மாயா இடையே சில பிரச்சினைகள் வந்தது. இதில், அர்ச்சனா மனமுடைந்து போய் கண்கலங்கினார்.
அத்துடன் நேற்றைய நாள் முடிவுக்கு வந்த நிலையில், இன்றைய நாளில் முதல் பிரமோ வெளியாகி உள்ளது. அதில், பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாக்ஸ் வீட்டின் அருகே ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கில் கூல் சுரேசிக்கும் பிரதீப்பும் இடையே ஏற்படும் வாக்குவாதத்தால் கூல் சுரேஷ் திடீரென வீட்டை விட்டு வெளியேறுகிறேன். எனக் கூறி, தனது பொருட்களை எல்லாம் பெட்டியுடன் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது பிரமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவின் கூல் சுரேஷ் பார்த்து தமிழன்டா வா என பிரதீப் அழைக்க சண்டை ஆரம்பிக்கிறது. இதன் பின்னர் இருவருக்கும் இடையே, வாக்குவாதம் ஏற்பட்டு கூல் சுரேஷ் பார்த்து சில்லறை பையன் என பிரதீப் கூறுகிறார்.
மேலும், போடா வாடா என்று பேசுகிறார். இதனால், கடுப்பாகும் பொழுது செருப்பால அடிப்பேன் என்று வார்த்தையை கூறுகிறார். இதன் பின்னர் யார் என்ன சொல்லவந்தாலும், தன்னிடம் வந்தாலும் கூட அவர்களுக்கு மரியாதை தராமல் பிரதீப் பேசுகிறார். இது குறித்த பிரமோ வெளியாகிய தற்போது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ”…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு. நிகழ்ச்சியை கொண்டு…
இந்தியர்களை அதிரவைத்த சம்பவம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல…
This website uses cookies.