நாங்கள் தனுஷ் சார் கூட போட்டிபோட நினைக்கவில்லை என பிரதீப் ரங்கநாதன், டிராகன் பட நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
சென்னை: விஜய் சேதுபதி, அசோக் செல்வன் நடிப்பில் வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படைப்பு டிராகன். இப்படத்தில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் அனுபாமா பரமேஸ்வர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, அம்மேடையில், தனுஷின் படம் ரிலீஸ் ஆகும் நாளன்று, இயக்குநர் விக்னேஷ் சிவன் உடன் பயணிக்கும் நீங்கள் (பிரதீப் ரங்கநாதன்) எப்படி எதிராக படத்தை ரிலீஸ் செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரதீப் ரங்கநாதன், “நீங்கள் இப்படிச் சுற்றி மாறுபட்ட கோணத்தில் பதிலளிப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.
தனுஷ் சாரின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் எங்களில் டிராகன் படமும் ரிலீஸ் ஆகிறது. தனுஷ் சார் உடன் போட்டி போடுவதற்கு, அதே தேதியில ரிலீஸ் செய்யவில்லை. அஜித் சாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6அம் தேதி ரிலீஸ்.
எனவே, அன்று எங்களால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தொடர்ந்து, அதற்கு அடுத்த வாரமான பிப்ரவரி 21ஆம் தேதி நல்ல வரவேற்பு கிடைக்கும் என எங்கள் படத்தை ரிலீஸ் செய்கிறோம். தனுஷ் சாரும் அப்படித்தான் சிந்தித்து இருப்பார். மற்றபடி நாங்கள் தனுஷ் சார் கூட போட்டிபோட நினைக்கவில்லை.
இதையும் படிங்க: அனுபவம் எப்படி இருந்துச்சு…? பிக் பாஸ் நடிகையுடன் ஊர் சுற்றிய ரயான் : கசிந்த வீடியோ!
பெரிய ஹிட் படம் கொடுத்த ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். அவரது அடுத்தப் படத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குநர் என்னுடைய 10 வருட நண்பர் என்பெதெல்லாம் அதற்குப் பிறகு தாம். இது அதுவாகவே அமைந்தது. நாங்கள் தொழிலையும், நட்பையும் போட்டுக் குழப்பிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
மேலும், டிராகன் படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாக உள்ளது. அதுமட்டுமின்றி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக, நயன்தாராவின் ஆவணப்படம் தொடர்பாக விக்னேஷ் சிவன், நயன்தாரா – தனுஷ் உடனான வழக்கு நீதிமன்றம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.