“லவ் டூடே” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமாக வலம் வருபவர்தான் பிரதீப் ரங்கநாதன். “லவ் டூடே” திரைப்படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த “டிராகன்” திரைப்படம் வேற லெவலில் பாராட்டை பெற்றது. “டிராகன்” திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் “LIK”, “Dude” போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதில் “LIK” திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரீத்தி ஷெட்டி நடித்துள்ளார். “Dude” திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதனின் “LIK” திரைப்படம் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் தற்போது “Dude” திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. “Dude” திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் “Dude” திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.