பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். அதனை தொடர்ந்து மிகவும் தீவிரமாகவே பிரதமர் மோடியையும் அவர் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியையும் மிகவும் கடுமையாகவே விமர்சித்து வருகிறார்.
தற்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு இந்தியாவை ஆண்ட மன்மோகன் சிங் பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடியே தரவில்லை, தற்போது மோடிதான் பயங்கரவாதிகளை களையெடுக்க புறப்பட்டுள்ளார் என்பது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
“நெருக்கடியான இக்காலகட்டத்தில் நாடு ஒன்றுபட்டு இருக்கும் இந்த சமயத்தில், இராணுவம் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், எல்லையில் குடிமகன்கள் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் முட்டாள்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். இது இந்தியாவின் மதவெறியர்கள் கட்சியின் அருவருப்பான அரசியல். இதற்கு நீங்கள் வெட்கப்படவில்லையா பாஜகவே” என்று ஆதங்கத்தோடு பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
பணத்தாசை பிடித்த இளையராஜா! தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது…
This website uses cookies.