செல்லும் இடமெல்லாம் செல்ஃபி… மீண்டும் பெண்களின் நாயகனாக வலம் வரும் பிரசாந்த் – வீடியோ!

Author:
10 August 2024, 4:25 pm
Quick Share

90ஸ் காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் பிரசாந்த் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து பல வருடம் ஒதுங்கியிருந்தார். திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர் தற்போது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கி இருக்கிறார்.

நடிகர் பிரசாத். தற்போது விஜய்யுடன் “கோட்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தவிர நடிகர் பிரசாந்த் அந்தகன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். பாலிவுட் நடிகர் ஆன ஆயிஷ்மான் குரானா நடிப்பில் வெளிவந்த “அந்தாதூன்” படத்தின் தமிழ் ரீமேக் தான் “அந்தகன்” திரைப்படம். இந்த திரைப்படம் நேற்று ஆகஸ்ட் 9ம் ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த நிலையில் அந்தகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படியான நேரத்தில் நடிகர் பிரசாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். மேலும் பல YouTube சேனல்களிலும் பிரசாந்தை பட குழுவினர்களோடு சேர்த்து பேட்டி எடுத்து வருகிறார்கள்.

அத்துடன் ரசிகர்கள் பலர் பிரசாந்துடன் செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் மீண்டும் பெண்களின் கனவு நாயகனாக பலரையும் கவர்ந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகைகள் பிரியா ஆனந்த் மற்றும் சிம்ரன் உடன் பிரசாந்த் நடந்து கொள்ளும் விதம் வீடியோக்களாக வெளியாகி அவரை புகழ்ந்து “பெண்களை மதிக்கக் கூடிய கண்ணியமான ஒரே நடிகர் பிரசாந்த்” என்று பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 97

    0

    0