உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு .
செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை.
அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது.
மேலும் சமீபத்தில் ரிலீசான யானை படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. தற்போது பொம்மை டிரைலரில் இவர் அடித்த முத்தம் இணையதளத்தில் சத்தமாக கேட்கிறது.
இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில், பிரியா பவானி சங்கர் சினிமாவில் நுழைய கஷ்டப்பட்டதாகவும் வாய்ப்புகள் கிடைக்க கடினமாக உழைத்ததல் தான் பணம் கிடைத்ததால் அதற்காக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். தற்போது பணம் சம்பாதிப்பதைவிட நல்ல கதையில் நடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆனால் இதை சிலர் பிரியா பவானி சங்கர் பணத்திற்காக நடிக்கிறேன் என்று தெரிவித்ததாக செய்திகளை பரப்பிய நிலையில், இதை அறிந்த பிரியா பவானி சங்கர், டிவிட்டரில் பதிலடி கொடுத்து ஒரு பதிவினை தற்போது பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் பணத்திற்காக தான் நடிக்கிறேன் என்று சொல்லவே இல்லை என்றும், அப்படி தான் சொல்லியிருந்தாலும் என்ன தப்பு என்றும் எல்லோரும் பணத்திற்காகத்தான் வேலை பார்க்கிறோம் என்றும், நடிகர் நடிகைகள் அப்படி காசு வாங்குவதை ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கூறியதோடு “மாப்ள சொம்பு கொடுத்தா தான் தாளி கட்டுவாறாம்” என்பது போல் மீடியா நடந்துகொள்கிறது என ஆரம்பித்து ஒரு பதிவினை போட்டு பதிலடி தந்துள்ளார்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.