“எந்த பையனும் இப்படி சொல்ல மாட்டுறான்..” பிரியா பவானி ஷங்கர் வருத்தம் !

Author: Udhayakumar Raman
7 September 2021, 4:44 pm
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது மேக்கப் இல்லாமல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரைசா, “Make Up இல்லாம.. அழகா தெரியுரத முதல்ல நிறுத்துங்க..” என்று அவரது அழகை வர்ணித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர்..”எந்த பையனும் என் மேல இப்படியான வரிகளை யூஸ் பண்றது இல்லையே.. அது தான் எனக்கு ஏமாற்றமாக இருக்கிறது..” என்று ரிப்ளை கொடுத்துள்ளார்.

Views: - 345

1

0