சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால், அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் ராஜவேல் என்ற நபரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். அவருடன் பங்களா வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் காதலன் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், என்னுடைய பாய்பிரண்ட் ராஜவேல் வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது என்னை பார்க்க வருவதற்காக 4- 5 மாதங்கள் அங்கு பார்ட் டைம் வேலை பார்த்து காசு சேர்த்து என் பிறந்தநாளில் வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். அடுத்த நாளே அவர் மீண்டும் கிளம்பி அங்கு சென்றுவிட்டார். அவர் அந்த 4 மாதம் சம்பாதித்த பணம் வெறும் பிளைட் டிக்கெட்டிற்கு தான் ஆச்சு. ஆனாலும், அவ்வளவு கஷ்டப்பட்டு என்னை பார்க்கவந்தார் என பிரியா பவானி ஷங்கர் மிகவும் நெகிழ்ச்சியோடு அந்த பேட்டியில் பேசினார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.