உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், l சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு .
செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை.
அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது.
மேலும் சமீபத்தில் ரிலீசான யானை படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. தற்போது பொம்மை டிரைலரில் இவர் அடித்த முத்தம் இணையதளத்தில் சத்தமாக கேட்கிறது.
இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் இவரை பற்றிய சுவாரசியமான ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது செய்தி வாசிக்கும் அரங்கத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்.
அப்போது அங்கே இருந்த ஒரு சாமியார் அங்கங்கே தான் வைத்திருந்த தண்ணீரை தெளித்து விட்டு இருக்க அந்த தண்ணீரை நடிகை பிரியா பவானி சங்கர் முகத்திலும் தெளித்திருக்கிறார்.
அப்போதுதான் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து உட்கார்ந்த நடிகைகளின் மேக்கப் இதனால் கலைந்தது. இதனால் கடுப்பான நடிகை பிரியா பவானி சங்கர் கேமராமேனை பார்த்து என்ன கொடுமை இது.. என்ன பண்றாங்க.. என்று கேட்டுள்ளார்.
உங்களை, தீயசக்திகள் அண்டாமல் இருப்பதற்காக இப்படி செய்கிறார்கள் என கேமராமேன் கிண்டலாக பதில் கூறியிருக்கிறார். முதல் நாள் செய்தி வாசிக்க போகிறேன்.. ஆனால் என்னை பார்த்து தீய சக்தி என்று சொல்லி விட்டார்களே.. என்று கோபப்பட்டாராம்.. இந்த சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.