உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு.
செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை.
அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. மேலும் சமீபத்தில் ரிலீசான யானை படம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது.
இப்போது அரை டஜன் படங்களை கையில் வைத்துள்ள இவர்,இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கல்யாணம் கமனீயம் என்ற படத்தில் நடித்திருந்தார். படம் ஓரளவுக்கு ஓடிய நிலையில், தற்போது மீண்டும் தொலுங்கு பக்கம் திரும்பியிருக்கிறார். இயக்குனர் ஹர்ஷா இயக்கத்தில், கோபி கோபிசந்தின் 31 வது படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
சத்யசாய் ஆர்ட்ஸ் கேகே ராதாமோகன் தயாரிப்பில் இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடிகை மாளவிகா சர்மா இரண்டாம் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.