“முழங்கால மடக்கி மட்டும் தான் பண்ணனும்” டிரெயினர் இன்னும் நல்லா டிரைனிங் கொடுக்கனும் – பட்டயைக்கிளப்பும் பவானி சங்கர்…
Author: Mari12 January 2022, 11:07 am
திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவர் நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படம், ஓ மணப்பெண்ணே, உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன.
இவர் தற்போது, சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அதில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், தற்போது ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் படுத்துக்கொண்டு ஒர்க் அவுட் செய்யும் போது, முழங்காலை மட்டும் தான் மடக்க வேண்டும் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
0
0